தமிழகம்

தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு முன்பு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாபு என்பவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வி ஜார்ஜ் என்பவர், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வாகனம் இடம்பெற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், முறையாக மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், வழக்கை திங்கட்கிழமையன்று விசாரணை எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT