குவைத்துக்கு டிரைவர் வேலைக்கு சென்ற கணவரை மீட் டுத்தரக்கோரி மனைவி தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.
அரியலூர் மாவட்டம் கீழப்பழ வூரைச் சேர்ந்த ஜில்சத்பேகம் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “என் கணவர் ஆலம் முஸ்தபா, டிரைவராக பணியாற்றி வந்தார். தஞ்சாவூர் டிராவல்ஸ் நிறுவனம் மூலமாக அவர் டிரைவர் வேலைக்காக கடந்த 2014-ம் ஆண்டு குவைத் சென்றார். ஆனால் அங்கு அவருக்கு டிரை வர் வேலை கொடுக்காமல் வீட்டு வேலைகளைச் செய்யும்படி துன் புறுத்தியுள்ளனர். பாஸ்போர்ட்டை யும் வாங்கி வைத்துக் கொண்டனர். கடந்த 2015 செப்டம்பரில் என்னைத் தொடர்புகொண்ட என் கணவர், தான் குவைத் குடியு ரிமை அலுவலகத்தில் இருப்பதாக வும் பிரச்சினை பெரிதாகிவிட்ட தாகவும் கூறினார். அதன் பிறகு அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. நான் தற்போது 4 வயது மகனுடன் தவித்து வருகிறேன். எனது கணவரை மீட்க மத் திய அரசு அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும்’’என்று குறிப்பிட் டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, இதுகுறித்து மத் திய வெளிவிவகாரத்துறைச் செயலர், வெளிநாட்டில் குடியமர்ந் தோருக்கான பாதுகாப்பு செயலர் மற்றும் தமிழக அரசி்ன் மறுவாழ் வுத்துறை முதன்மைச் செயலர் ஆகியோர் 2 வாரத்துக்குள் பதில ளிக்க உத்தரவிட்டனர்.