தமிழகம்

திமுக, அதிமுகவுக்கு தோல்வி பயம்: அன்புமணி கருத்து

செய்திப்பிரிவு

பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் திருச்சி யில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் கடந்த கால சம்பவங்களை மறைத்து, தற்போது மக்களிடம் பொய்யான, தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மதுவிலக்கு குறித்து பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வரும் நிலையில், தஞ்சாவூரில் கருணாநிதி பேசும்போது, சத்தி யமாக மதுவிலக்கு வரும் என்கிறார். அடுத்த முறை சாமி சத்தியமாக மதுவிலக்கு வரும் என்றுகூட சொல்வார். அதே போல, முடியவே முடியாது என்று சொன்ன ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள், தற்போது படிப்படியாக மதுவிலக்கு என் கின்றனர். இது திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தைக் காட்டுகிறது.

பாமக ஆட்சி அமைந்தால், திருச்சி தமிழகத்தின் 2-ம் தலை நகராக்கப்பட்டு, குறிப்பிட்ட துறைகளின் தலைமையகங்கள் இங்கேயே அமைக்கப்படும். துறைவாரியாக நடைபெற்ற ஊழல்கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றார்.

முன்னதாக, நேற்று முன்தினம் இரவு சமயபுரம் நான்கு சாலையில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை அறிமுகப் படுத்தி அன்புமணி பேசினார்.

SCROLL FOR NEXT