சென்னை: ஆயுர்வேத மருத்துவம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதன் பெருமைகளை உலகுக்கு தெரிவித்துவரும் பதஞ்சலி ஆய்வு மையம் தற்போது கருப்பு பூஞ்சை நோய் (Mucormycosis) பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பதஞ்சலி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு நவீன அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கருப்பு பூஞ்சைக்கு (mucor) எதிராக ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட மூக்கில் சொட்டு மருந்தாக பயன்படுத்தவல்ல ‘அனு தைலம்’ என்ற மருந்தின் செயல்திறனை கண்டறிந்துள்ளது. இது ஜர்னல் ஆஃப் அப்ளைடு மைக்ரோபயாலஜி என்றபிரபல அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வுக் கட்டுரையை https://sfamjournals.onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/jam.15451 என்ற லிங்கில் காணலாம்.
இது ஆயுர்வேத மருந்துகளின் நவீனபயன்பாடு, அறிவியல் ரீதியான சரிபார்ப்புக்கு மற்றொரு உதாரணமாகக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.