தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான சோதனைக்கு உள்நோக்கம் ஏதும் இல்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

செய்திப்பிரிவு

முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடக்கும் சோதனையில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரி வித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

பொங்கலுக்கு வந்தவர்களுக்கு அரசுப் பேருந்து கிடைக்கவில்லை என்ற தகவலில் உண்மையில்லை. பொங்கல் பண்டிகையின்போது அனைத்து நாட்களிலும் பேருந்துகள் கூட்டமின்றியே சென்றன. இடம் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை யன்று கோட்டாட்சியர்களை வைத்து பேருந்துகளைச் சரிபார்த்து அனுப்பியதால் மக்கள் நிம்மதியாகப் பயணித்தார்கள்.பொங்கல் தொகுப்பில் விட்டுப் போன பொருட்களை இன்று வாங்கிக் கொள்ளலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். பிரச்சினை தற்போது சரியாகி விட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடக்கும் சோதனையில் உள்நோக்கம் ஏதும் இல்லை. உப்பு தின்னவர் தண்ணீர் குடிப்பதும், தப்பு செய்தவர் தண்டனையை அனுபவிப்பதும் இயல்பே.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT