தமிழகம்

எழும்பூர் தொகுதியில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

செய்திப்பிரிவு

சென்னை எழும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக வேட்பாளர்கள் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். “ஏன் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும்?” என்பதற்கான தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் அவர்கள் மக்களிடம் வழங்கினர்.

இத்தேர்தலில், எழும்பூர் தொகுதி யில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.எஸ்.ரவிச்சந்திரன், தேமுதிக மக்கள் நலக் கூட்டணி சார்பில் தேமுதிகவின் மத்திய சென்னை மாவட்ட இளைஞரணி துணை செயலா ளர் த.பிரபு, பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில எஸ்.சி. அணி பொருளாளர் ம.வெங்கடசேன் ஆகியோர் போட்டி யிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி, எழும்பூர் தொகுதியில் வடமலை தெரு, மூக்காத்தாள் தெரு, டானா தெரு, சின்னதம்பி தெரு உள் ளிட்ட இடங்களில் முதல்வர் ஜெயலலி தாவின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரித்தார். அவரு டன் அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

திமுக வேட்பாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், எழும்பூர் தொகுதியில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, ஆளுங்கட்சிக்கு எதிரான தகவல்கள் கொண்ட “ஐந்தாண்டு களாய் துருப்பிடித்துக் கிடக்கும் தமிழ் நாடு” என்று தலைப்பிட்ட துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்கினார்.

சுப்பாநாயுடு தெரு, அவதானம் 2-வது தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, சூளை மார்க்கெட், சட்டனன் தெரு, ஆரிமுத்து தெரு உள்ளிட்ட இடங்களில் திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது வீடு, வீடாகவும், கடைகள்தோறும், பஸ் நிறுத்தம் போன்ற பொது இடங்களிலும் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது, “நான் இந்தத் தொகுதியைச் சேர்ந்த இளைஞன். இத்தொகுதியிலேயே வசிக்கும் எனக்குத்தான் இங்குள்ள பிரச்சினைகளும், அதை தீர்த்துவைப்ப தற்கான வழிமுறைகளும் தெரியும். எனவே, முதல்முறையாக இத்தேர் தலில் போட்டியிடும் எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று சொல்லி கே.எஸ்.ரவிச்சந்திரன் வாக்கு சேகரித்தார்.

தேமுதிக வேட்பாளர் த.பிரபு, எழும்பூர் தொகுதியில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும், புளியந்தோப்பு, சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் கூட்டணிக் கட்சிகளான மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கோரினார். புளியந்தோப்பு பகுதியில் ஆட்டோ ஓட்டுநர், கடை உரிமையாளர்கள், ஊழியர்கள், மகளிர் உள்ளிட்டோரைச் சந்தித்து அவர் வாக்கு சேகரிக்கும்போது, “எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று கூட்டணி மந்திரிசபை அமைக்கும். எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் எனக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று இருகரம் கூப்பி வணங்கி கேட்டுக்கொண்டார்.

பாஜக வேட்பாளர் ம.வெங்கடேசன் நேற்று தனது ஆதரவாளர்களுடன் புளியந்தோப்பு 4-வது தெரு, திம்லஸ் ரோடு, தட்டாங்குளம், ராஜா தோட்டம், குமாரசாமிராஜாபுரம், சிவராஜபுரம், சுந்தரபுரம், புரசைவாக்கம் அக்ரஹாரம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கோரியதுடன், அங்குள்ள மக்களிட மும் வாக்கு சேகரித்தார். அப்போது, பாஜகவின் வளர்ச்சி கோஷத்தை முன்னிறுத்தியும், தமிழகத்தில் திரா விடக் கட்சிகளின் ஆட்சியில் மக்க ளுக்கு நேர்ந்த துயரங்களை விளக் கும் வகையில் தகவல்கள் இடம் பெற்றிருந்த துண்டுப் பிரசுரங்களையும் மக்களுக்கு அவர் வழங்கினார்.

SCROLL FOR NEXT