தமிழகம்

திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக் கிறது. நேற்று அதிகபட்சமாக திருச்சியில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் (40.6 டிகிரி செல்சியஸ்) கொளுத் தியது. மதுரை, கோவை, சேலம், பாளையங்கோட்டை உள்ளிட்ட 9 நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. வெப்பத்தால் உடல் நிலை பாதிக்கும் என்பதால் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக் குள்ளே மக்கள் முடங்கியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் நேற்று திருச்சி, கரூர் பரமத்தி, வேலூர், கோவை, தருமபுரி, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருப்பத்தூர் ஆகிய 9 இடங்களில் வெயில் 100 டிகிரி யைத் தாண்டி கொளுத்தியது.

திருச்சியில் 105 டிகிரி, வேலூர், கரூர் பரமத்தியில் 104 டிகிரி, திருப்பத்தூர் 103.6 டிகிரி, சேலம், தருமபுரி 103.2 டிகிரி, பாளையங்கோட்டை 103.1 டிகிரி, மதுரை 102.2 டிகிரி, கோவை 100.4 டிகிரி, சென்னை விமான நிலையம் (மீனம்பாக்கம்) 99.1 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 95.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

SCROLL FOR NEXT