தமிழகம்

பிப்.27-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

செய்திப்பிரிவு

சென்னை: நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்.27-ம் தேதி நடக்க உள்ளது.

தற்போது நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை தீவிரமடைந்து வருகிறது. பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியாவில் பல்வேறுமாநிலங்களின் கோரிக்கையை ஏற்று, ஜன.23-ம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், பிப்.27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT