தமிழகம்

கடலூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் இரண்டாயிர விளாகம் கிராமத்தில் வசித்து வந்தவர் அய்யப்பன் (34), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஜீவா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அய்யப்பன், பாகூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் சித்தேரி அணைக்கட்டில் மீன்பிடிக்கச் சென்றார். அப்போது அவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தார். இதனை யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அய்யப்பனின் உடல் இறந்து மிதந்த நிலையில் மீட்கபட்டது.

SCROLL FOR NEXT