தமிழகம்

சந்தேகத்தின் பலனால் குற்றவழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர் நஷ்டஈடு கோர முடியாது: உயர் நீதிமன்றம்

செய்திப்பிரிவு

சந்தேகத்தின் பலனால் குற்ற வழக்கில் இருந்து விடுவிக்கப் பட்டவர் நஷ்டஈடு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இதுதொடர்பாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.அருண் சென்னை உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனு விவரம்:

கடந்த 2004-ம் ஆண்டு சுப்பிரமணி என்பவர் உட்பட 9 பேர் என்னைக் கடுமையாகத் தாக்கினர். இதுகுறித்து நானும் எனது தந்தையும் லத்தேரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றோம். எங் களது புகார் மனுவை ஏற்காத காவல் ஆய்வாளர், சுப்பிரமணி கொடுத்த புகாரை மட்டும் ஏற்றுக்கொண்டு என் மீதும், தந்தை மீதும் பொய் வழக்கு பதிவு செய்தார். இவ்வழக்கில் இருந்து எங்களை விடுதலை செய்து வேலூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, பொய் புகார் கொடுத்த சுப்பிரமணியும், அதனடிப்படையில் பொய் வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஆகியோர் கூட்டாக நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி இந்த வழக்கை விசாரித்து, மனுதாரர் மீதான குற்ற வழக்கில் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்படவில்லை. அத னால், சந்தேகத்தின் பலன் அளிக்கப்பட்டு அவர் விடு விக்கப்பட்டிருக்கிறார். அதனால் மனுதாரர் இழப்பீடு கோர முடியாது என்று உத்தர விட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அருண் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சதீஷ் அக்னிகோத்ரி, வேணுகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து, “குற்ற வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவதும், சந்தேகத்தின் பலனால் விடுவிக்கப்படுவதும் வழக்கம்தான். அதுபோன்ற சூழலில் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி நஷ்டஈடு கோர முடியாது. எனவே, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படு கிறது’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT