அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் உறுதிமொழி ஏற்ற மாடு பிடி வீரர்கள் உள்ளிட்டோர்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்திய அமைச்சர் மூர்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் உட்பட 3 ஊர்களில் ஜல்லிக்கட்டை பலரும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடத்திய அமைச்சர்பி.மூர்த்தியை முதல்வர் ஸ்டாலின் மற்றும் விழாக் குழுவினர் பாராட்டினர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னின்று நடத்திய அமைச்சர் பி.மூர்த்தியை முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி, ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் பாராட்டினர்.

இது குறித்து விழாக் குழுவினர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு இப்பகுதி மக்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது என்பதை அமைச்சர் மூர்த்தி30 ஆண்டுகளாக அறிவார். நீதிமன்றத்தில் போராடி பெற்ற உரிமையை, ஓராண்டு நடத்தாவிட்டாலும் சிக்கல்வரலாம். இதை உணர்ந்தே பார்வையாளர்கள் இல்லாமலாவது ஜல்லிக்கட்டை நடத்தியாக வேண்டும் என அரசிடம் வலியுறுத்தி அனுமதி பெற்றார்.

கரோனா விதிகளைப் பின்பற்றி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்தனர். ஆன்லைன் முறையில்காளைகள், வீரர்கள் பதிவு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஒரு காளை, ஒரு வீரர்ஒரு ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் மட்டும் பங்கேற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுகளில் தங்கக் காசுகள் அதிக அளவில் பரிசுகளாக வழங்கப்பட்டன.

அதே உற்சாகத்துடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நேற்று நடந்தது. எப்போதும் இல்லாத வகையில், பங்கேற்ற அனைத்து காளைகள், வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஆகியோர் பெயர்களில் தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

3 நாட்களில் நன்கொடை, பரிசுப் பொருட்களை எவ்வாறு பெறுவது என விழாக் குழுவினர் தயங்கினர். அவர்களுக்கு வழிகாட்டியாகவும்உடன் இருந்து ஏற்பாடுகளை அமைச்சர் கவனித்தார். இதுவரைஇல்லாத வகையில் மாநில அளவில்முன்மாதிரியான ஜல்லிக்கட்டாகமதுரை மாவட்டம் நடத்திக் காட்டியது. இதை அறிந்த முதல்வர் ஸ்டாலின் நேற்று அமைச்சர் மூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி மற்றும் பல்வேறு அமைச்சர்களும் மூர்த்தியை பாராட்டினர். 3 ஊர் விழாக் குழுவினரும் அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து அமைச்சர் மூர்த்திகூறும்போது, ‘‘எப்போதும் செய்யும்பணிதான். முதல்வர் உத்தரவோடு சிறப்பாக நிறைவேற்றியுள்ளோம். அனைவரின் ஒத்துழைப்பால் இது சாத்தியமானது’’ என்றார்.

SCROLL FOR NEXT