தமிழகம்

100 சதவீத வாக்குப்பதிவு இலக்கை எட்ட என்ன செய்யப்போகிறது தேர்தல் ஆணையம்?

அ.அருள்தாசன்

தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கேரளம், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பணிபுரிகிறார்கள். வாக்குப்பதிவு நாளான வரும் மே 16-ம் தேதி இவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பிவந்து வாக்களிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு அவர்கள் வாக்களித் தால்தான் 100 சதவீத வாக்குப் பதிவு என்ற இலக்கை எட்ட வாய்ப்பிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த தேர்தல் கள்போல் இல்லாமல் இம்முறை தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு என்ற இலக்கை முன்னிறுத்தி தேர்தல் ஆணையம் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. சட்டப் பேரவை தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டதிலிருந்து வாக்குப்பதிவு நாளுக்கு கூடுதல் நாள்கள் இருந்ததால் இடைப்பட்ட காலத்தில் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களும் திட்ட மிட்டு செயல்பட முடிந்தது.

நகர்ப்புறங்கள், கிராமப் புறங்கள் வரையில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விழிப்பு ணர்வு சென்றடைந்திருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளால் இம்முறை வாக்குப்பதிவு சதவி கிதம் அதிகரிக்கும் என்று அதிகாரி கள் நம்பிக்கை தெரிவித்திருக் கிறார்கள்.

அக்னி நட்சத்திர வெயிலை பொருட்படுத்தாமல் வாக்காளர் களை வாக்குச்சாவடிகளுக்கு வரவழைக்க தேர்தல் ஆணை யம் மேற்கொண்டுள்ள முயற்சி களுக்கு வெற்றி கிடைக் கும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறமி ருக்க, தமிழகத்திலிருந்து தற்கா லிகமாகவோ அல்லது நிரந்த ரமாகவோ இடம்பெயர்ந்து வெளிமாநிலங்களில் தற்போது பணிபுரியும் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து வாக்குப்பதிவு செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு அவர்கள் வந்து வாக்களிக்க ஏதுவான விழிப்புணர்வில் தேர் தல் ஆணையம் இன்னும் ஈடுபட வில்லை.

கேரளத்தில் 5 லட்சம் பேர்

தமிழக தேர்தல் நிலவரம் குறித்து தகவல்களை திரட்டுவதற்காக கேரளம் மாநிலம் கொல்லத்தி லிருந்து கடந்த 3 நாட்களுக்குமுன் திருநெல்வேலிக்கு வந்திருந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவரை சந்தித்தபோது இது குறித்து விவாதித்தார். தமிழகத்திலிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணி புரிகிறார்கள். குறிப்பாக தமிழகம்- கேரளத்தின் எல்லையோர மாவட்டங்களில் இருந்துதான் அதிகமானோர் பணியின் நிமித்தம் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இதில் நூற்றுக்கணக்கானோர் மட்டுமே குடும்பங்களுடன் இடம்பெயர்ந்து கேரளத்தில் தங்கியிருந்து வேலைகளை செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்.

குமரி மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தி லுள்ள கடலோர கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் கேரள கடலோர பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர் கள் கட்டுமான பணிக்கு சென்றுள் ளனர். இவர்கள் அனைவரும் மாதக்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் அங்கேயே தங்கியிருந்து பணிபுரிகிறார்கள்.

தங்கள் சொந்த ஊரில் நடைபெறும் கோயில் விழாக்கள், வீட்டு விசேஷங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்குத்தான் இவர்கள் ஊர்பக்கம் தலைகாட் டுவார்கள். இதுபோன்ற தொழிலா ளர்கள் மே 16 வாக்குப்பதிவு நாளில் ஊருக்குவந்து வாக்களிப் பார்களா என்ற கேள்வி எழுந் துள்ளது.

மேலும் ஊருக்கு வருவதற்கு ஏற்படும் செலவை கருத்தில் கொண்டு பலர் வாக்களிக்க வருவதில்லை. கேரளத்திலிருந்து மட்டுமல்ல கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் தமிழக தொழிலாளர்கள் வாக்களிக்க வருவார்களா என்பதை அறுதியிட்டு சொல்வதற் கில்லை.

அவ்வாறு ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வாக்களிக்க தங்கள் சொந்த ஊர்களுக்கு வராத நிலையில் அவர்கள் பெயரில் கள்ள வாக்கு பதிவாக வாய்ப்புகள் அதிகமுள்ளன. மேலும் வாக்குப்பதிவு சதவீதமும் குறையலாம்.

எனவே வெளிமாநிலங்களில் பணியில் உள்ள, தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் கள் இடம்பெற்றிருக்கும் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்கும் வகையிலான விழிப்புணர்வுக்கு தேர்தல் ஆணையம் அந்தந்த மாநில அளவில் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

SCROLL FOR NEXT