தமிழகம்

3-வது இடம் கூட அதிமுக வராது: ஜெ.வுக்கு மு.க.ஸ்டாலின் பதில்

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி சார் பில் போட்டியிடும் வேட்பாளர் களை ஆதரித்து நேற்று களியக்கா விளையில் பிரச்சாரத்தை தொடங் கிய ஸ்டாலின் பேசியதாவது:

கோடநாட்டைத் தவிர ஜெய லலிதா கடந்த 5 ஆண்டுகளில் எப்போதாவது இந்த பகுதிக்கு வந்தது உண்டா? பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் களை கொத்தடிமைகளைப் போல் நடத்துகிறார். நமக்கு நாமே பயணம் மூலம் 234 தொகுதி களுக்கும் சென்று, பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்டு, அவற் றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் அறிக்கை அமைத் துள்ளோம். சொல்லாததையும் செய்துள்ளோம் என ஜெயலலிதா கூறுகிறாரே அதை எப்படி ஏற் பது? மூலைக்கு மூலை மதுக் கடைகளை சொல்லாமல் திறந்துள் ளார். செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்து விட்டுள்ளார்.

திமுக 2-வது இடத்துக்கு கூட வராது என திருச்சியில் ஜெய லலிதா கூறியுள்ளார். ஆனால், அதிமுக 3-வது இடத்துக்கு கூட வராது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மார்த்தாண்டம், முளகுமூடு, தக்கலை, நாகர்கோ வில், ஆரல்வாய்மொழி, ராதா புரம், நாங்குநேரியிலும் பிரச்சாரம் செய்தார். இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சாரம் செய் கிறார்.

SCROLL FOR NEXT