கோப்புப் படம் 
தமிழகம்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடக்கம்: காளைகள், காளையருக்கு தங்கக் காசு பரிசு

செய்திப்பிரிவு

மதுரை : ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு காரணமாக கானும் பொங்கலையொட்டி, இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது

காணும் பொங்கலை ஒட்டி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். ஆனால், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று கானும் பொங்கல் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், அலங்காலநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பிக்கும் வகையில் அடுத்த நாளான இன்று போட்டி தொடங்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழியுடன் தொடங்கிய போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தனர்.

இப்போட்டியில் 800 காளைகள் களமிறக்கப்படுகின்றன. 300 மாடுபிடி வீரர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

களமிறங்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு தலா ஒரு தங்ககாசு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் காரும், சிறந்த வீரருக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசளிக்காக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐந்தாயிரத்திற்கும் குறையாமல் ஒவ்வொரு காளைக்கும் பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக விழாக் குழு அறிவித்துள்ளது.

போட்டியையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஆயிரத்திற்கும் அதிகமாக போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டியைக் காண குறைந்த அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT