தமிழகம்

கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் இன்று சந்திப்பு: தொகுதி பங்கீட்டில் நல்ல முடிவு ஏற்படும் - மு.க.ஸ்டாலின் தகவல்

செய்திப்பிரிவு

தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் பேசு வதற்காக காங்கிரஸ் மூத்த தலை வர் குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வருகிறார். இதில் நல்ல முடிவு ஏற்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம், கருணா நிதி தலைமையில் கோபால புரம் இல்லத்தில் நேற்று நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை நடத்துவதற்காக காங் கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நாளை (இன்று) சென்னை வரவுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்த சந்திப்புக்கு பிறகு நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளபோதிலும், சென்னையின் பல இடங்களில் தொடர்ச்சியாக சாலைகள் போடப்படுகின்றன. இதுபோன்ற விதிமுறை மீறல் தொடர்பாக திமுக வழக்கறிஞர்கள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர். டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களது புகார்கள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

SCROLL FOR NEXT