திருவள்ளுவர் தினத்தையொட்டி, பர்கூர் அடுத்த ஜிஞ்சம்பட்டியில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 
தமிழகம்

பர்கூர் அருகே திருவள்ளுவருக்கு கோயில் கட்டி பூஜை செய்து வழிபடும் மக்கள்

செய்திப்பிரிவு

திருவள்ளுவர் தினத்தையொட்டி, பர்கூர் அடுத்த ஜிஞ்சம்பட்டி கிராமத்தில் திருவள்ளுவரை மூலவராக கொண்டு கோயில் கட்டி கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

பர்கூர் அடுத்த ஜிஞ்சம்பட்டி கிராம மக்கள் ஒருங்கிணைந்து திருவள்ளுவர் தொண்டு அறக்கட்டளை மற்றும் திருவள்ளுவர் நல சங்கம் அமைத்துள்ளனர். இதன் சார்பில் கிராமத்தில் திருவள்ளுவருக்கு கோயில் கட்டியுள்ளனர்.

திருவள்ளுவரை மூலவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தையொட்டி திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து கிராம மக்கள் வழிபட்டனர்.இதையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சுப் போட்டிகளும், பெண்களுக்கு கோலப் போட்டி யும் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்சியில் ஜிஞ்சம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று திருவள்ளுவரை வழிபட்டு சென்றனர்.

SCROLL FOR NEXT