தமிழகம்

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை தேவையில்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மாவட்ட சுகாதார இணை இயக்குநர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள கடிதம்:

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழலைக் கருத்தில்கொண்டு, யாருக் கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரி சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

யார் எல்லாம் வீட்டுத் தனிமையை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்பன குறித்து புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல், உடல் வலி உள்ளவர்களுக்கு கட்டாயம் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ, இணை நோய்கள் உள்ளவர்களாகவோ இருந்தால் அவர்களுக்கு பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண் டும்.

அதேபோல், வெளிநாடு களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பரிசோதனை செய்ய வேண்டும்.

அதேநேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து அறிகுறிகள் எதுவும் தென்படாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை. இணை நோய் இல்லாத வர்கள் மற்றும் இளம் வயதினருக்கும் பரிசோதனை அவசியமில்லை. பிற மாநிலங் களில் இருந்து தமிழகம் வருவோருக்கும் பரிசோ தனை கட்டாயமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT