காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 1,34,695 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் 36,39,491 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 59,128 ஆண்கள் மற்றும் 75,526 பெண்கள், 41 மூன்றாம் பாலினத்தவர்கள் என, மொத்தம் 1,34,695 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 7 மூன்றாம் பாலினத்தவர்கள், 2,794 ஆண்கள், 2,355 பெண் வாக்காளர் என, மொத்தம் 5,156 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18,02,429 ஆண்கள் மற்றும் 18,36,780 பெண்கள், 282 மூன்றாம் பாலின வாக்காளர் என, மொத்தம் 36,39,491 வாக்காளர்கள் உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.