வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் உள்ளார்.
இவர் கடந்த 2 ஆண்டுகளாக மூட்டு வலி, முதுகு வலி மற்றும் சிறுநீர்ப்பை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, தொடர் மருத்துவ சிகிச்சையும் பெற்று வருகிறார்.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் மத்திய சிறையிலில் இருந்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று காலை பேரறிவாளனை போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு காலை 8.30 மணி முதல் பகல் 11 மணி வரை அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், அவர் பாதுகாப்புடன் வேலூர் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து, போலீஸார் கூறும் போது, ‘‘மூட்டு வலி, முதுகுவலி மற்றும் சிறுநீர்ப்பை நோய்த் தொற் றுக்கு பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருகிறார். மாதந்தோறும் அவருக்கு வழங்க வேண்டிய மருந்து, மாத்திரைகள் பரி சோதனை செய்து வழங்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாகவே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேரறிவாளன் சென்று வந்தார்’’ என்றனர்.