காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்தத் திருநாளில் பொங்கல் பண்டிக்கையின் சிறப்பையும், விவசாயத் தொழிலில் அழிந்து வரும் காளை மாடுகளின் பயன்பாட்டை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் கீழ்கதிர்ப்பூர் கிராமத்தில் செங்கரும்புகளால் காளை மாடுகள் உருவம் செய்து பொங்கல் கொண்டாடப்பட்டது.
இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் தன் வீட்டின் அருகே செங்கரும்பு கட்டுகளால் செய்யப்பட்ட காளைமாடுகளை வைத்து புதுப்பானையில் பொங்கல் வைத்து தனது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
விவசாயிகளையும், காளை மாடுகளின் சிறப்புகளையும் விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட செங்கரும்பால் செய்யப்பட்ட காளை மாடுகளை கிராம மக்கள்பலர் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டுச் சென்றனர்.