தமிழகம்

ராமேசுவரத்தில் கரை ஒதுங்கிய மர்மப் படகு

செய்திப்பிரிவு

ராமேசுவரத்தில் கரை ஒதுங்கிய பைபர் படகை போலீஸார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்பு போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் பைபர் படகு கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் நேற்று காலை தகவல் அளித்தனர். உடனே படகு கரை ஒதுங்கிய கரையூர் கடற்பகுதிக்கு வந்த ராமேசுவரம் போலீஸார் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் பிரிவு போலீஸார், 25 அடி நீளம், 7 அடி அகலம் கொண்ட இலங்கை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அந்த படகை கைப்பற்றினர். இந்த படகு, கடத்தல்காரர்கள் பயன்படுத்தியதா அல்லது அகதிகள் யாரும் வந்துள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT