ராமநாதபுரம் அருகே கூட்டுறவு வங்கியில் 412 பவுன் நகை கொள் ளைக்கு உடந்தையாக இருந்த பெண் அதிகாரியிடம் போலீஸார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடித்து விசாரித்த பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கண்காணிப்பாளர் தெரி வித்தார்.
ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 6-ம் தேதி பிற்பகல் 2 பேர் வங்கி யின் பெண் செயலாளர் கஸ் தூரியை கட்டிப்போட்டு 412 பவுன் நகைகளை கொள்ளைடித்துச் சென்றனர். போலீஸ் விசாரணை யில் அவர் தனது உறவினர் மூலம் நகைகளை கொள்ளைடிக்கச் செய்து நாடகமாடியது அம்பல மானது.
இது குறித்து ராமநாதபுரம் சரகக் கூட்டுறவு துணைப் பதிவாளர் செண்பகராஜ் புகாரின்பேரில் பஜார் காவல் ஆணையாளர் வெங்கடேசன், ரூ.61.81 லட்சம் மதிப்புள்ள 412 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக நேற்று முன்தினம் இரவு வழக்கு பதிவு செய்தார்.
ராமநாதபுரம் உதவி கண் காணிப்பாளர் சர்வேஸ்ராஜ், ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான தனிப் படையி னர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக செயலாளர் கஸ்தூரியிடம் விசா ரணை நடைபெற்றது.
இது குறித்த விசாரணையில், விவசாயிகளுக்கு பயிர்க் கடன் கள், விவசாய நகைக் கடன் வழங்குவதில் பல முறைகேடு களை கஸ்தூரி செய்துள்ளதாக வும், போலியான பெயர்களில் பதிவு செய்து கடன் பெற்றுள்ளதாகவும், முறைகேடுகளை கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் ஆய்வின்போது கண்டுபிடிக்காமல் இருந்துள் ளனர் என்பதும் தெரிய வந்துள் ளது.
நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கஸ்தூரியின் உறவினர் காளிதாஸ் உட்பட 2 பேரை போலீ ஸார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக ராமநாதபுரம் உதவி கண்காணிப்பாளர் சர்வேஸ் ராஜ் கூறியதாவது:
செயலாளர் கஸ்தூரி மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம். கொள்ளையர்களை பிடித்து விசாரித்த பின்னரே கைது நடவடிக் கைகள் எடுக்கப்படும் என்றார்.