இந்த பொங்கல் திருநாளில் அனைவருக்கும் அன்பும் உள்ளத் தெளிவும் கிடைக்க வேண்டும் என்று பங்காரு அடிகளார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பொங்கல் ஆசியுரையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த பொங்கல் திருநாளில் பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில் அமைதியும், நிம்மதியும் கிடைக்க ஆசியும், அருளும் உண்டு. அன்புக்குக் கட்டுப்பட வேண்டும். உள்ளம்தெளிவாக இருக்க வேண்டும். அப்போதுதான் உலகம் அமைதியாக இருக்கும்.
உடல் சூடானால் நோய் உண்டாகும். அதேபோல் குளிர்ச்சி அதிகமானாலும் நோய் உண்டாகும். சீரான இயற்கை உணவுகளைச் சாப்பிட்டால் நோய் வராது. சிறுதானிய கஞ்சி, கடலை எண்ணெய்,நல்லெண்ணெய் போன்றவற்றைச் சாப்பிடும்போது நோய் வராது.
அனைவருக்கும் அன்பு, பண்பு, பாசம் இருக்க வேண்டும். இயற்கை போற்றி வணங்கி வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.