மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நேற்று பார்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது அதிமுக அரசு தான். கரோனா பரவும் காலத்திலும் ஜல்லிக் கட்டை நடத்த மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆன்லைன் மூலம் காளை களை பதிவு செய்ய முடியாமல் கல்வியறிவு இல் லாதவர்கள் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.