தமிழகம்

10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஆலோசனை: ராதாகிருஷ்ணன்

செய்திப்பிரிவு

சென்னை: 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடம் நடத்தலாம் என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தல் குறித்து முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடம் நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இவை எல்லாமே கலந்தாலோசிக்கப்பட வேண்டிய விசயம்தான். மாணவர்களுக்குத் தடுப்பூசி மிக முக்கியமான ஆயுதம்.

அதேபோல் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கிடைத்து வந்தது. உலக சுகாதார நிறுவனம் கூட மாணவர்களுக்கு மன ரீதியாக கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறியிருந்தது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. கரோனாவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வந்தது. மேலும் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு உள்ளது. அவர்களுக்குத் தடுப்பூசியும் செலுத்த வேண்டியுள்ளது. எனவே இவையெல்லாம் குறித்து ஏற்கெனவே கலந்தாலோசித்து வருகிறோம், வரக்கூடிய கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்படும்" என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT