காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பணிமனைகளை, தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதிஷ் நேற்று பல்வேறு பகுதிகளில் திறந்து வைத்தார். செங்கல்பட்டு தேமுதிக வேட்பாளர் அனகை முருகேசனை ஆதரித்து மறைமலைநகர் பகுதி யில் வாக்கு சேகரித்தார்.
பின்னர், மதுராந்தகத்தில் தேமுதிக வேட்பாளர் தென்னர சுவை ஆதரித்து முக்கிய சாலைகளில் வாக்கு சேகரித்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்ததால், குடியாத்தம் தொகுதியில் இந்திய குடியரசு கட்சியின் செ.கு.தமிழர சன் வெற்றிபெற நான்தான் காரணமாக இருந்தேன். தற்போது, அதிமுக கூட்டணியில் மதுராந்தகம் தொகுதி யில் போட்டியிடும் அவர் தோல்வி அடைய நானே காரணமாக இருப்பேன். ஏனெனில் மதுராந்தகத்தில் நானே போட்டியிடுவதாக கருதி கட்சி தொண்டர்கள் பணி யாற்றி வருகின்றனர்.’ என்றார். உத்திரமேரூர், காஞ்சிபுரம் தொகுதிகளிலும் தேர்தல் பணிமனைகளை திறந்த வைத்த மக்களிடம் வாக்கு சேகரித்தார்.