தமிழகம்

ஆண்டிபட்டி அருங்காட்சியகத்தில் நேதாஜி பயன்படுத்திய வானொலி

செய்திப்பிரிவு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருங்காட்சியகத்தில் மாதம் ஒரு அரிய பொருள் காட்சிக்கு வைத்து அதன் சிறப்புகளை விளக்கி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாதம் 1950-களில் பிரபலமாக இருந்த வானொலிப் பெட்டி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காப்பாட்சியர் சே.கிருஷ்ணம்மாள் கூறுகையில், இந்திய தேசியப் படையை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945-ம் ஆண்டு சிங்கப்பூர் அரண்மனையில் வசித்தபோது இந்த வானொலியை உபயோகப்படுத்தி உள்ளார். இத்தகவல் இதில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வெற்றி மந்திரமான ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையும் இதில் உள்ளது.19-ம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த பில்கோ கம்பெனியால் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இணையம், தொலைக்காட்சி, அலைபேசிக்கு முந்தைய காலகட்டத்தில் இந்த வானொலி தகவல் தொடர்பு, பொழுதுபோக்கில் முதன்மை பெற்று விளங்கியது.

இந்த வானொலிப் பெட்டியை இம்மாதம் முழுவதும் பார்வையாளர்கள் வந்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT