பொறியியல் படிப்புக்கு இதுவரை 1.25 லட்சம் மாணவ, மாணவிகள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்தோடு பதிவு செய்து வருகின்றனர். ஆன்லைனில் பதிவு செய்த பிறகு, அந்த விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்து, உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரிலோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் அல்லது வரைவோலை மூலமாக செலுத்தலாம்.
12-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 1 லட்சத்து 25 ஆயிரத்து 241 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 64 ஆயிரத்து 887 பேர் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்