கே.என்.விஜயகுமார் | கோப்புப் படம். 
தமிழகம்

திருப்பூர் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமாருக்கு கரோனா

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமாருக்கு (65) கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ.வுக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்தது. இதையடுத்து கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டார்.

இதில் அவருக்கு தொற்று உறுதியானது. திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் உட்பட 9 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களது குடும்பத்தில் யாருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT