தமிழகம்

பட்டாசு வெடி விபத்துகளில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்துக்கு ரூ.36 லட்சம் நிதி உதவி: அமைச்சர்கள் வழங்கினர்

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார்.

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 12 பேரின் வாரிசுதாரர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.36 லட்சம் உதவித்தொகையை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் பெறுவதற் கான ஆணைகளை வழங்கினர். பின்னர், சொக்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடை களையும், கோயில் பணியாளர்கள் உட்பட 59 பேருக்கு சீருடைகளையும் அமைச்சர்கள் வழங்கினர்.

SCROLL FOR NEXT