புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது. இளவரசன் கொலை முதல் உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கு வரை தொடர்புடையவர்கள் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க புரட்சி பாரதம் கட்சி முடிவு செய்துள்ளது. இவ்வாறு ஜெகன்மூர்த்தி கூறினார்.