தமிழகம்

தமிழகத்தில் பல்கலை. தேர்வுகள் கால வரம்பின்றி ஒத்திவைப்பு: அமைச்சர் பொன்முடி

செ. ஞானபிரகாஷ்

சென்னை: தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளும் கால வரம்பின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி, தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும், செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். மாணவர்களுக்கு ஏற்கெனவே பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த தேர்வுக்கு தயாராவதற்காக விடப்பட்டுள்ள இந்த விடுமுறையை மாணவர்கள் பயன்படுத்தி, நன்றாக படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும்.

இந்த உத்தரவை மீறி ஏதாவது கல்லூரியில் தேர்வுகள் நடத்தப்படுவதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT