தமிழகம்

வீடுகளுக்கு நேரில் சென்று அங்கன்வாடி குழந்தைகளுக்கு உலர் உணவு விநியோகம்

செய்திப்பிரிவு

சென்னை: கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கன்வாடி குழந்தைகளுக்கு இன்று முதல் உலர் உணவு பொருட்களை அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள்துறை சார்பில் மாவட்ட திட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அங்கன்வாடி மையத்தில் முன்பருவக் கல்வி பயில பதிவு செய்துள்ள 2-6 வயது குழந்தைகளுக்கு மதிய உணவுக்கு பதில், உலர் உணவாக அரிசி, பருப்பு, முட்டையை அவர்களது வீடுகளுக்கேசென்று வழங்க அங்கன்வாடிபணியாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். முதல்கட்டமாக ஜன.10-(இன்று) முதல் 20-ம் தேதி வரை உலர் உணவு வழங்கப்படும்.

6 மாதம் முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 11-14 வயது பள்ளி செல்லா வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கும் சத்துமாவையும் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்க வேண்டும். 1-2வயது குழந்தைகளுக்கு வாரம் ஒரு நாள் வழங்கப்படும் முட்டையையும் நேரில் சென்று வழங்கவேண்டும். இப்பணியின்போதுபணியாளர்கள் அனைவரும் அரசுவெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

SCROLL FOR NEXT