மதுரை விமான நிலையத்தில் கூடியிருந்த பயணிகள் மற்றும் உறவினர்கள். 
தமிழகம்

முழு ஊரடங்கு நாளில் மதுரை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம்

செய்திப்பிரிவு

முழு ஊரடங்கு தினமான நேற்று மதுரை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் உறவினர்கள் கூட்டம் அதிகமாகக் காணப் பட்டது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பால் வார நாட்களில் இரவுநேர ஊரடங் கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. மதுரை விமான நிலையத்தில் துபாய் உட்பட பல்வேறு வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து விமானங்கள் நேற்று வழக்கம் போல் வந்து சென்றன.

இதனால் மதுரை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அவர்களை வழியனுப்ப வந்தவர்கள் கூட்டம் நேற்று வழக்கத்தைவிட அதிகமாகவே இருந்தது. இதற்கிடையில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப் படுகிறது. அதற்கான முடிவு கிடைக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் சொந்த ஊருக்குச் செல்ல தாமதம் ஏற்பட்ட தாகவும், முடிவுகளை விரைவாக அறிவிக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

SCROLL FOR NEXT