திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் கீர்த்தி ஜி.சுப்பிரமணியம் மேல்மருவத்தூ ரில் நேற்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து கீர்த்தி சுப்பிர மணியம் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘பல்லடம் தொகுதி கிடைத்தால், எனது அதிருப்தியை கட்சி தலைமைக்கு வெளிப்படுத்தினேன். உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் முதல் நகராட்சியை தேமுதிக கைப்பற்றி யது பல்லடத்தில்தான். கடந்த 7 ஆண்டுகளாக தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தேன்.
தேமுதிகவில் உழைப்புக்கு மரியாதை இல்லை. சந்திரகுமாரின் கட்டுப்பாட்டிலும் நான் இல்லை. தற்போது, மதிமுகவின் கட்டுப்பாட்டில் தேமுதிக உள்ளது’ என்றார்.
புதிய நிர்வாகிகள்
தேமுதிக திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த கீர்த்தி ஜி.சுப்ரமணியம் திமுகவில் இணைந்ததையடுத்து, அவரது பொறுப்புக்கு புதிய நிர்வாகி களை விஜயகாந்த் நியமித்துள் ளார். அவர் வெளியிட்ட அறிக்கை யில், ‘‘திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக பொறுப்பாளர்களாக சேகர் (திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத் தலைவர்) மற்றும் முத்து வெங்கடேஷ் (திருப்பூர் தெற்கு மாவட்ட துணைச் செயலா ளர்) ஆகியோர் செயல்படுவார்கள். இவர்களுக்கு தேமுதிக நிர்வாகி கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.