விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு முன்பதிவு செய்வதற்கான ‘இ-வாடகை’ செயலியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் இறையன்பு, துறை செயலர் சமயமூர்த்தி, துறை இயக்குநர் அண்ணாதுரை, சர்க்கரை துறை ஆணையர் ஹர்மந்தர் சிங், வேளாண் வணிகத் துறை இயக்குநர் நடராஜன், வேளாண் பொறியியல் துறை தலைமை பொறியாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தமிழகம்

வேளாண் இயந்திரங்களை முன்பதிவு செய்ய இ-வாடகை செயலி தொடக்கம்

செய்திப்பிரிவு

வாடகை வேளாண் இயந்திரங்களை முன்பதிவு செய்வதற்கான இ-வாடகை செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நெல் தரிசில், உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை 11 லட்சம் ஏக்கரில் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவைப்படும் விதைகள்உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பயறு வகைகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையில்கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 5 விவசாயிகளுக்கு இடுபொருளை வழங்கி இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் மூலம் ரூ.97.01 கோடியில் கட்டப்பட்ட வேளாண்மை விற்பனை, வணிகத்துறை கட்டிடங்கள், வேளாண் பொறியியல் துறை அலுவலக கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை, விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்யஇ-வாடகை ஆன்லைன் செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ரூ.50 கோடி மானியம்

மேலும், ரூ.50.73 கோடி மானியத்தில், விவசாயிகளுக்கு 2,118வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் வழங்குதல்மற்றும் வேளாண் இயந்திரமாக்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்து, 5 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகளை வழங்கினார்.

இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் www.agrimachinery.nic.in’ என்றஇணையதளத்தில் விண்ணப்பித்து உரிய மானியம் பெற்றுக் கொள்ளலாம்.

SCROLL FOR NEXT