தமிழகம்

இலவச தையல் இயந்திரம் பெற சிறுபான்மையின பெண்கள் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

விழுப்புரம்/கடலூர்: சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற்றிட விண்ணப்பிக்கலாம் என கடலூர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் பாலசுப்ரமணியம், மோகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்தவர்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்,புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் இனத்தை சார்ந்தவர்களுக்கு மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. இதற்கு வயது வரம்பு 20 முதல் 45 வரை ஆகும். தையல் கலை பயின்றவராகவும் இருக்க வேண்டும். தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT