தமிழகம்

இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் ஏடிஜிபி ஜாபர்சேட்டுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்: மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு

செய்திப்பிரிவு

போலீஸ் உளவுத்துறை ஏடிஜிபி ஜாபர்சேட்டை, தற்காலிக இடை நீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய் துள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயம், அவருக்கு மீண்டும் பணி வழங்கவும் நேற்று உத்தரவிட்டது.

கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் உளவுத்துறை ஏடிஜிபி யாக பதவி வகித்து செல்வாக்கு மிக்க ஐபிஎஸ் அதிகாரியாக கோலோச்சியவர் ஜாபர்சேட். 2011-ல் அதிமுக அரசு பதவியேற்ற தும் இவர் மண்டபம் அகதிகள் முகா முக்கு மாற்றப்பட்டார்.

ஜாபர்சேட் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி செய்து, உண்மைகளை மறைத்து தனது மனைவி பெயரில் திருவான் மியூரில் வீட்டுவசதி வாரிய மனை ஒதுக்கீட்டை முறைகேடாக பெற்ற தாகவும், இதன்மூலம் ரூ. பலகோடி மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

8 இடங்களில் சோதனை

இந்தக் குற்றச்சாட்டின் அடிப் படையில் சென்னையில் ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் மற்றும் மகள் ஜெனிபர் வசிக்கும் வீடுகள் என சென்னையில் 8 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில், கடந்த 2011 ஆகஸ்ட் 1-ம் தேதி ஜாபர்சேட் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி ஜாபர்சேட் சென்னை மத்திய நிர்வாக தீர்ப் பாயத்தில் தாக்கல் செய்த மனு வில், ‘‘கடந்த 2011-ல் இருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை எனது இடைநீக்க உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இடைநீக்கம் செய்யப் பட்ட நாளில் இருந்து 2 ஆண்டு களுக்குள் விசாரணை நடத்தி அதன் மீது உத்தரவு பிறப்பிக்கா விட்டால், இடைநீக்கம் தானாகவே காலாவதியாகிவிடும். என் மீது வழக்குப் பதிய தமிழக அரசு கோரிய அனுமதியை மத்திய அரசும் நிராகரித்துவிட்டது. இந் நிலையில் என் மீது வேண்டு மென்றே ஊழல் தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதனால் எனது குடும்பத்தினரின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. எனவே எனது இடைநீக்கத்தை ரத்து செய்து, மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியி ருந்தார். ஜாபர்சேட் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண், முபாரக் அகமது ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாய நீதிபதி ஏ.ஆறுமுகசுவாமி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஆர்.ராமானுஜம் ஆகியோர் அடங் கிய அமர்வு, ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டை தற்காலிக இடை நீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த துடன், அவருக்கு மீண்டும் பணி வழங்கவும் நேற்று உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT