தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா கடந்த 9-ம் தேதி சென்னை தீவுத்திடலில் தொடங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்.
தனது சுற்றுப் பயணத்தின், அடுத்தகட்டமாக நாளை (ஏப்ரல் 18) காஞ்சிபுரம் வாரணவாசியில் நடைபெற உள்ள பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 18 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கோரி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அவர் பேச உள்ளார்.