தமிழகம்

மாணவர் விடுதிகளை மூட உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளை உடனடியாக மூட வேண்டும் என்று உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பதால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையே, பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர்.

ஜன.20 முதல் தொடர் விடுமுறை

இதையடுத்து பொறியியல் உட்பட அனைத்து கல்லூரிகளுக்கும் ஜன.20-ம் தேதி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளையும் உடனடியாக மூட வேண்டும் என்று, அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், ‘‘கரோனா பரவல் தீவிரம் அதிகரித்து வருவதால், உயர்கல்வி நிறுவனங்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்.

தற்போது கல்லூரிகளுக்கு ஜன.20-ம் தேதி முதல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் தங்கும் விடுதிகளையும் கல்லூரிகள் உடனடியாக மூட வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊருக்குச் செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும். வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துதர வேண்டும். மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படும் வரை இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்’’ என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT