சென்னை மாவட்டத்தில் 418 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
பெருநகர சென்னை மாநக ராட்சி கோடம்பாக்கம் மண்டலம் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் சார்பாக 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நேற்று வடபழனி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான பி.சந்தரமோகன் பங்கேற்று கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
பழம் பெருமை வாய்ந்த நம் ஜனநாயக நாட்டில் வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகவும் அவசியமான ஒன்று. இன்றைய இளைய தலைமுறை யினராக விளங்கும் நீங்கள் அனைவரும் கட்டாயம் வாக்குரி மையை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்க்க பல்வேறு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பது உங்களின் முதல் கடமை. இக்கல்லூரியை பொறுத்தவரை 99 சதவீதம் மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். எஞ்சியுள்ள ஒரு சதவீதம் மாணவர் களுக்கும் இன்று (நேற்று) வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2-வது கடமையாக மே 16-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று, உங்கள் குடும்பத்தினருடன் வாக்களிக்க வேண்டும். வாக்களிப் பதன் அவசியத்தை உங்கள் அருகில் உள்ளவர்கள், நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு சந்திரமோகன் கூறி னார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 418 வாக்குச்சாவடி கள் பதற்றமானவை என கண்டறியப் பட்டுள்ளது. அப்பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை மாநகர காவல் துறை செய்து வருகிறது. மக்கள் அச்சமின்றி, நேர்மையாக வாக்களிக்கலாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு பறக்கும் படையினரால் பிடிக்கப்பட்ட ரூ.1 கோடியே 24 லட்சத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷியா மரியம், மத்திய வட்டார துணை ஆணையர் சுபோத்குமார், கல்லூரி முதல்வர் துரைவேலு உள்பட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இப்பேரணி வடபழனி, கோடம் பாக்கம் பகுதிகளில் பல்வேறு சாலைகள் வழியாக அம்பிகா காம்ப்ளக்ஸ் வரை சென்று அடைந்தது.
முன்னதாக நடைபெற்ற கருத்தரங்கில் தேர்தல் ஆணை யத்தால் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு பாடலை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் வெளியிட்டார்.