மத்திய பட்ஜெட்டில் உணவு, உர மானியம் ரூ.7 ஆயிரம் கோடியை குறைத்துவிட்டு, விவசாயி களுக்கான பட்ஜெட் என பா.ஜ.க. கூறுவது வேடிக்கையாக உள்ளது என மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் வாசுகி கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்றது. ராமநாதபுரம் தாலுகா குழு செயலர் எம்.ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வி.காசிநாததுரை உட்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் உ.வாசுகியிடம் ரூ.5 லட்சம் தேர்தல் நிதியாகவும், ரூ.5 லட்சம் கட்சி நிதியாகவும் வழங்கப்பட்டது. பின்னர் உ.வாசுகி பேசியதாவது:
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மாறிமாறி ஆட்சி செய்கின்றன. அதற்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி உருவாகியுள்ளது. மக்கள் நலக் கூட்டணி குறைந் தபட்ச செயல்திட்டங்களை உருவாக்கி மக்களிடம் கூறி வருகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, தொழிலாளி களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம், போலீஸாருக்கு சங்கம் அமைப்போம் போன்றவை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
கடைசி சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ஜெய லலிதா, நூறு சதவீதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன என்றார். விவசாயிகள் தனி நபர் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவோம் என வாக்குறுதி அளித்திருந்தார். அதை நிறைவேற்றினாரா?. விவசாயிகள் கடனை திருப்பச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்யும் நிலை உள்ளது. கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினர்.
தொழிலதிபர் விஜய் மல்லையா 17 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்துவிட்டு, வெளிநாடு தப்பிவிட்டார். காங்கி ரஸ், பாஜக அரசு அவரை ராஜ்யசபா எம்.பி. ஆக்கியது. மத்திய அரசும், வங்கிகளும் அவரது சொத்தை கைப்பற்ற தயங்குவது ஏன்? கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 75 சாதிய கொலைகள் நடந்துள்ளன. இதுகுறித்து திமுக, அதிமுக வாய் திறக்காமல் உள்ளன. ஏன் என்றால் சாதிய வாக்குகள் வராமல் போய்விடும் என்ற பயம்.
ஐந்து ஆண்டுகளில் 80 லட்சம் பேருக்கு வேலை வழங்குவோம் என அதிமுக வாக்குறுதி அளித் தது. ஆனால், 4.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விழுப்புரம் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அன்புமணி ராமதாஸ் அங்கீகாரம் வழங்கினார். அப்போதைய திமுக அரசு அனுமதி வழங்கியது. தற்போதைய அதிமுக அரசு தொடர்ந்து அனுமதி அளித்துள்ளது. இப்படி சேர்ந்தே முறைகேடு செய்துள்ளனர்.
மீனவர் பிரச்சினைக்கு கடிதம் மட்டுமே எழுதும் முதல்வராக ஜெயலலிதா உள்ளார். இப்பிரச்சி னையை தமிழக, இலங்கை மீனவர்கள், மீனவ சங்கங்கள் பேசி தீர்க்க வேண்டும்.
மத்திய பட்ஜெட்டில் உணவு, உர மானியம் ரூ.7 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. நூறு நாள் வேலை திட்டத்துக்கு நிதி குறைக் கப்பட்டுள்ளது. இதை விவசாயி களுக்கான பட்ஜெட் என பா.ஜ.க கூறுகிறது. அது வேடிக்கையானது என்றார்.