6 கால்களுடன் பிறந்த கன்று. 
தமிழகம்

புதுச்சேரி: 6 கால்களுடன் பிறந்த கன்று

செய்திப்பிரிவு

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூனில் உள்ள வாதானூரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். விவசாயியான இவர், தனது வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசுமாடு ஆண் கன்றை ஈன்றுள்ளது. இந்தக் கன்றின் வயிற்றுப் பகுதியில் இரண்டு கால்கள் கூடுதலாக உள்ளது. மொத்தம் 6 கால்கள் உள்ளன. இதைக்கண்ட ஜெயபிரகாஷ் மற்றும் அவர் குடும்பத்தினர் ஆச்சர்யம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கிராம மக்கள், ஜெயபிரகாஷ் வீட்டிற்கு வந்து, 6 காலுடன் பிறந்த கன்று குட்டியை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

SCROLL FOR NEXT