தமிழகம்

கட்டுப்பாடுகளை பின்பற்றி பாலமேடு ஜல்லிக்கட்டு: விழா கமிட்டி நிர்வாகிகள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

பாலமேடு ஜல்லிக்கட்டு அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின் பற்றி நடத்தப்படும் என நேற்று நடந்த விழா கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.15-ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.

இதற்கிடையே கரோனாவை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாலமேட்டில் ஜல்லிக்கட்டை நடத்தும் கிராம பொது மகாலிங்க சுவாமி கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கமிட்டியின் தலைவர் மலைச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதிதங்கமணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் கமிட்டி நிர்வாகிகள் கூறியதாவது: ஜன.15-ம் தேதி பாலமேட்டில் அரசு வழிகாட்டு தலுடன் கூடுதல் பாதுகாப்போடு ஜல்லிக்கட்டு நடைபெறும்.

இதில் பங்கேற்கும் சிறந்த காளைக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் கன்றுடன் நாட்டு பசுமாடு, சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும். ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க முதல்வரை அழைத்து வர வேண்டும் என அமைச்சர் பி.மூர்த் தியிடம் வலியுறுத்தியுள்ளோம். முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கப்படும். கரோனா விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டை நடத்த மடத்து கமிட்டி நிர்வாகம் தயாராக உள்ளது. 650 முதல் 700 காளைகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT