மதுரையில் வைகை ஆற்றங்கரை யோரத்தில் அமைக்கப்படும் நான்குவழிச்சாலைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் முன்பே விரிசல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக வைகை ஆற்றில் விளாங்குடி முதல் விரகனூர் வரை 12 கி.மீ. தொலை வுக்கு ஆற்றின் இருபுறமும் நான்குவழிச் சாலை கள் அமைக்கப்படுகின்றன.
நகரில் ராஜா மில் பகுதியில் இருந்து குருவிக்காரன் சாலை வரை 3 கி.மீ. தொலை வுக்கு மாநகராட்சியும், மீதி 9 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இந்த நான்கு வழிச்சாலையை அமைக் கின்றன. இந்தச் சாலைகள், தொடர்ச்சியாக இல்லாமல் ஆங் காங்கே பாதியில் நிற்கின்றன.
வைகை ஆற்றங்கரையோரம் ஆங்காங்கே உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நீடிக்கும் தாமதமே இந்தச் சாலையை தொடர்ச்சியாக அமைக்க முடியாததற்கு காரண மாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தச் சாலைகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் முன்பே விரிசல் ஏற்பட்டு சிதில மடையத் தொடங்கி உள்ளது.
ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு, பாதாள சாக்கடைப் பணிகளுக்காக மாநகராட்சி இந்தச் சாலைகளில் குழிகளை தோண்டினர். தற்போது சாலைகள் விரிசல்விட ஆரம்பித்துள்ளன. இதனை மதுரை மக்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்கில் போட்டு மீம்ஸ்களாக பரப்பி வரு கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மாநகராட்சி சார்பில் அமைக்கப் படும் சாலையில் தொடர்ச்சியாக இல்லாத இடங்களில், சாலைகள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடக் கின்றன. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டுவிடும். மாநகராட்சி சாலைகளில் விரிசல் இல்லை. அது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் சாலை யாக இருக்கலாம் என்றனர்.