லோக் சத்தா கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் சென்னையில் நேற்று வெளியிட்டார். அதில் கூறியுள்ளதாவது:
கல்வித் தரத்தை மேம்படுத்த 3 ஆயிரம் மக்களுக்கு ஒரு தொடக்கப் பள்ளியும், 10 ஆயிரம் பேருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளியும் உரிய கட்டமைப்பு வசதிகளுடன் திறக்கப்படும். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயித்துக் கொள்ளலாம். அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்படும். லோக் ஆயுக்தா அமைக்கப்படும். தகவல் பெறும் உரிமைச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.