சென்னை: சிறைகளில் கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக சிறைக் கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்க கூடுதல்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள் ளன என்று சிறைத் துறை தெரி வித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சிறைகளில் கரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகள் தனி அறைகளில் அடைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
இதற்கிடையே, சிறைகளில் கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை சிறைத்துறை பணியாளர்கள், காவலர்கள், கைதிகள் என 15 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சிறைகளில் கைதிகளுக்கு வாரம் 2 முறை அவர்களது உறவினர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படுவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக முதல் மற்றும்2-வது அலையின்போது கைதிகளை உறவினர்கள் நேரில்சந்திக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் கரோனா பரவல் குறைந்ததால் உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
வீடியோ கால் வசதி
இந்நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் கரோனா 3-வது அலை பரவி வருகிறது. சிறைகளிலும் கைதிகளிடையே கரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, கைதிகளை உறவினர்கள் நேரடியாக சந்திக்ககூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீடியோ கால் மூலம்உறவினர்களிடம் கைதிகள் உரையாடவும் வழிவகை செய்யப் பட்டுள்ளது என்று சிறைத் துறை தெரிவித்துள்ளது.