ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனி அதிகரித்துள்ளது. நேற்று காலை நாகலூர் சாலையில் புகைமூட்டம் போல சூழ்ந்திருந்த பனி. 
தமிழகம்

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரிப்பு

செய்திப்பிரிவு

சேலம்: ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தினமும் காலை 11 மணி வரை பனி மூட்டம் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. காலை நேரங்களில் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்லும் நிலையுள்ளது.

பகலில் பனிப்பொழிவு அதிகரிப்பால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், சாலையோரக் கடைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் மக்கள் கூட்டமின்றி உள்ளது. வெளியூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் நிலவும் பனிப்பொழிவு மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிக குளிர் மற்றும் பனி காரணமாக வடமாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஏற்காட்டில் ஸ்வெட்டர், மப்ளர் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும், பயணிகளும் ஸ்வெட்டர் உள்ளிட்ட ஆடைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

SCROLL FOR NEXT