மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்களை வழங்கினார் கண் மருத்துவர் விஜயலட்சுமி. 
தமிழகம்

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் பார்வை குறைபாடுள்ளோருக்கு ஸ்மார்ட் போன்

செய்திப்பிரிவு

மதுரை அரவிந்த் கண் காப்பு அமைப்புடன், விஷன்-எய்ட் நிறுவனம் இணைந்து பார்வைக் குறைபாடுள்ள நபர்கள், மாணவர் களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரவிந்த் கண் மருத்துவமனை குறைபார்வை மறுவாழ்வு மைய குழந்தை கண் நல மருத்துவர் மற்றும் தலைவர் விஜயலட்சுமி கூறியதாவது:

பார்வை இழந்த, குறைபாடுள்ள நபர்கள், ஸ்மார்ட் போன்கள் மூலம் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுதந்திரமான வாழ்க்கையை வாழ இந்த திட்டம் உதவும். விஷன்-எய்ட் நிறுவனமும், பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு ஆன்லைன் மற்றும் மெய்நிகர் பயிற்சி திட்டங்களில் சேர உதவுகின்றன. மதுரை அரவிந்த் மருத்துவமனையில் குறை பார்வை உள்ளவர்களுக்கான ஆலோசனை மையத்தில் மொபைல் தொழில்நுட்பம் குறித்த சிறப்பு படிப்பை முடித்த 10 பேருக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பயனாளிகள், பார்வையற்றோருக்கான ஹேட்லி பல்கலைக்கழகம் ஆன்லைன் பயிற்சியை நடத்தியது என்றார்.

SCROLL FOR NEXT