கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் தேர்வான சிறந்த காளையின் உரிமையாளருக்கு காரை பரிசாக வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். உடன் அதிமுக நிர்வாகிகள். 
தமிழகம்

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் தேர்வான சிறந்த காளைக்கு கார் பரிசு: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

செய்திப்பிரிவு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான முதல் பரிசுக்குரிய கார் ஓராண்டுக்குப் பின் நேற்று வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் 2021-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நடந்த ஜல்லிக்கட்டை அப்போதைய முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு கார் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. வீரர்கள் கருப்பசாமி, கண்ணன் ஆகியோர் 20 காளைகள் வரை அடக்கினர். இதில் கார் பரிசு பெறும் சிறந்த வீரர் தேர்வில் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து கருப்பசாமி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சிறந்த காளையாகத் தேர்வான கம்பம் சந்தோஷின் காளைக்குப் பரிசு வழங்குவதில் பிரச்சினை இல்லையென்பதால் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து முதல் பரிசு பெற்ற கம்பம் சந்தோஷுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காரை பரிசாக வழங்கினார். அப்போது அய்யப்பன் எம்எல்ஏ, அதிமுக ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் உடன் இருந்தனர். சிறந்த வீரருக்கான பரிசு இன்னும் வழங்கப்படவில்லை.

SCROLL FOR NEXT